Sunday 5th of May 2024 04:20:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
சிகிச்சைக்காக தனி விமானத்தில் இன்று அமெரிக்கா புறப்பட்டார் நடிகர் ரஜினி!

சிகிச்சைக்காக தனி விமானத்தில் இன்று அமெரிக்கா புறப்பட்டார் நடிகர் ரஜினி!


மருத்துவ பரிசோதனைகளுக்காக தனி விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த விமானத்தில் செல்கின்றனர்.

அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவா் சென்னை திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக ரஜினிகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அவருக்கு இரண்டு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். எனினும் அவ்வப்போது அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்

இந்நிலையில் மீண்டும் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, அமெரிக்கா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE